Monday, January 16, 2012

முதல் அனுபவம்

1993 ஆம் ஆண்டு சங்கரங்கோவில் கல்லூரியில் இளநிலை வணிகவியல் இறுதியாண்டு பிரிவு உபச்சார விழா கொண்டாடினோம். முடிச்சுட்டு சர்க்கஸ் போகலாமுன்னு முடிவு பண்ணி கூட ரெண்டு வாத்தியாரயும் கூட்டுபோயாச்சு. அங்க போனதும் பயக அலும்ப ஆரம்பிச்சிட்டாங்க, பக்கத்துல உக்காந்துருந்த ஒரு ஆளு நம்ம பய ஒருத்தன கூப்டு "தம்பி நா குடும்பத்தோட வந்துருக்கேன் கொஞ்சம் பாத்து பேசுங்க"ன்னு சொன்னான். அதுக்கு நம்மாளு மூடிட்டு பார்ரா ங்கொய்யால ந்னு ஒரே வசனத்துல அடக்கீட்டான்.ஒரு அரைமணி நேரம் கழிச்சு ஸ்ரைக்கிங் ஃபோர்ஸ் குரூப்பா வந்தாங்க.. நம்மள வார்ன் பன்னுன ஆளு கைய காமிச்ச உடனே பயகல எல்லாம் ரவுண்டு கட்டி கும்ம ஆரம்பிச்சாங்க.. எங்க ஓடுரதுன்னு தெரியாம எல்லாரும் தலைதெறிக்க வாசல பாத்து ஓடினோம் , அங்க கதவு தெறந்து தயாரா இருந்தது போலீஸ் வேன். எப்பிடித்தான் முப்பது பேரு அந்த வேன்ல அடஞ்சு கெடந்தோம்ன்னு இப்ப நெனச்சாலும் ஆச்சரியமா இருக்கு. நேரா ஸ்டேஸனுக்கு கொண்டு வந்து சட்டைய கழட்டச் சொல்லி கும்மீட்டாங்க.. "எங்க பய மூடீட்டு பாக்கச்சொன்னது கழுகுமலை எஸ் ஐ யாம் ",நெலமை நிதானத்துக்கு வந்த பொறவு பாத்தா இதுல வாத்தி ரெண்டு பேரும் சட்டை இல்லாம கூட இருக்காங்க.. எல்லாரயும் பேரு அப்பன் பேரு ஊரு எல்லாம் கேட்டு எழுதீட்டு வந்தாங்க..அதுல ஒருத்தன் பேரு சொல்லி ஊரு புளியங்குடி 11 ஆவது வகுப்பு படிக்கேன்னான் என்னடா நக்கலா ?ன்னாரு ஏட்டு. இல்லசார் நா ஓரமா சர்க்கஸ் பாத்துட்டு இருந்தேன் என்னயும் அடிச்சு கூட்டியாந்துட்டாங்கன்னு அழுதான் சல்லிப்பயககூட ஏம்லே சர்க்கஸ் பாக்க வாரே நீனு ந்னு சமாளிச்சுட்டாரு ஏட்டய்யா..!! இதுக்கு நடுவால பக்கத்துல ஓரமா எஞ்செவனேன்னு வொக்காந்துருந்த ஒரு காவாலிப் பயல கூப்ட்டு சரமாரியா அடிச்சாங்க.. அவன் வாங்குன அடிக்கு எங்க எல்லாரு கண்ணுலயும் பூச்சி பறந்துச்சு.எல்லாருக்கும் என்ன பயம்ன்னா இது அப்பனாத்தாவுக்கு தெரிஞ்சா அவங்க வேற அடி பின்னீருவாங்களேன்னு !!. என்ன செய்ய விதி ந்னு நெனச்சு வரிசை கட்டி சொல்லீட்டிருந்தோம். என்மொறை வந்துச்சு.. பேரு என்னாடா... சொன்னேன் ,அப்பா பேரு.... சொன்னேன், ஊரு என்ன..... சொன்னேன்... குனிஞ்சு எழுதீட்டு இருந்த ரைட்டரு நிமுந்தாரு.. என்னய மேல கீழ பாத்து வாத்தியார் பையந்தானலே நீ ந்னு கேட்டவொடனே, எனக்கு தடயமில்லாம அழிச்சிரலாம்ன்னு நெனச்ச கடைசி ஆசையும் காணாம போச்சு. உங்கய்யா கிட்ட படிச்சவண்டா நான் அவுரு புள்ள இப்பிடி வந்து நிக்க.. ந்னு மொறச்சாரு. அவரு கிட்ட கண்ணீரும் கம்பலயுமா வீட்ல சொல்லீராதீகன்னு கதறி.. நா ஒண்ணுமே செய்யல.. எவனோ செஞ்சதுக்கு என்னயவும் கூட்டியாந்துட்டங்கன்னேன். சரின்னு கேட்டவரு , போ.. போயி சட்டைய போட்டுக்கோன்னாரு..அப்பத்தான் உசுரு ரிவர்ஸ் கியர் போட்டு ஒடம்புல வந்து ஒக்காந்துச்சு. அவருகிட்ட போயி சார் எங்க வாத்தி ரெண்டு பேரு சட்டையில்லாம இருக்காங்க அவங்களையும்ன்னு..... இழுத்தேன். அதுக்குள்ள போன் வந்துச்சு. எடுத்து காதுல வச்சு சொல்லுங்க நகரம் ந்னு பேச ஆரம்பிச்சாரு கடசியா சரி விட்ருவோம்ன்னு வச்சுட்டாரு..நம்ம கேங்க்ல இவ்வளவுக்கும் காரணமானவன், கூட ரெண்டு பயகலோட தப்பிச்சு போயி அவங்க மாமா நகர செயலாளர் கிட்ட சொல்லீருக்கான். எஸ் ஐ கிட்ட போயி எல்லாத்தையும் ஏட்டு சொன்னதும் பயகள பூராம் எந்திரிச்சு லைனா நிக்கச்சொன்னாரு. அட்வைஸ் மழை பெய்ய ஆரம்பிச்சது..வரிசைல இருந்த நம்மாளு ஒருத்தன் ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர் ந்னு சவுண்டு குடுத்துட்டான். மனுசன் வெறியாகி நீங்கள்லாம் எங்கடா திருந்தப்போரீங்கன்னு சாபம் குடுத்து தொரத்தி உட்டாரு.. அந்த சம்பவத்துக்கு பொறவு பரீட்சை ஆரம்பிச்சதால காலேஜுக்குள்ள இந்த விஷயம் பரவாம சிங்கமாவே மெயிண்டென் பண்ணி பி.காம் படிப்பை ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி வெளிய வந்தாச்சு. மேப்படிப்புக்கு அமெரிக்காவா போக முடியும்.. எப்பயும் போல கோவை பிஎஸ்ஜி அன்புடன் அழைத்தது.. அத அடுத்த போஸ்ட்ல சொல்றேன்

1 comment:

  1. தல... கலக்கலா இருக்கு... விஷயமும் சூப்பர்... எழுத்து நடையும் சூப்பர்.. தொடர்ந்து கலக்குங்க.. :)

    ReplyDelete